தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா – அமலா தம்மபதியரின் மகன் அகில் நடித்து தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்று 50 கோடிக்கு மேல் வசூல்சாதனை செய்த ‘ஹலோ’ படம் அதே பெயரில் தமிழிலும் வெளியாகிறது. தமிழிலும் நாகர்ஜூனாவே தயாரிக்கிறார்.
கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர் பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாதவன் நடித்த யாவரும் நலம், சூர்யா நடித்த 24 ஆகிய படங்களை இயக்கிய விக்ரம்.கே.குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
ரம்யா கிருஷ்ணன் பாகுபலி படத்திற்கு பிறகு இந்த படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் ஜெகபதிபாபு, அஜெய், சத்யகிருஷ்ணா, அனீஸ்குருவில்லா, வெண்ணிலா கிஷோர் ஆகியோரும் நடித்துள்ளனர்.
பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அனூப் ரூபன்ஸ் இசையமைக்க, பிரவீன் பாடி எடிட்டிங் செய்கிறார். ஸ்ரீ லஷ்மி ஜோதி கிரியேசன்ஸ் சார்பில் ஏ.என்.பாலாஜி இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறார்.
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...