தொலைக்காட்சி, அச்சு ஊடகங்களைக் காட்டிலும் இணையதளம் மற்றும் சமூக வலைதள ஊடகங்கள் தான் தற்போது மக்களிடம் விரைவாக சென்றடைகிறது. அதிலும், யூடியுப் என்ற வீடியோ சமூக வலைதளத்தில் அப்லோட் செய்யப்படும் சில வீடியோக்கள் உலக அளவில் மக்களிடம் பிரபலமாகிவிடுகிறது.
அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சிறுமி ஒருவர் அடித்த தனது தாயிடம், “குணமா சொல்லணும்...அடிக்க கூடாது...” என்று அழுதபடியே சொல்லும் வீடியோ யூடியுபில் வைரலாக பரவியது. இதையடுத்து அந்த குழந்தையையும், பெற்றோரையும் சில முன்னணி வார இதழ்கள் கூட பேட்டி எடுத்தன.
இந்த நிலையில், அந்த வீடியோவில் அந்த சிறுமி சொல்லிய “குணமாக சொல்லனும்” என்ற வார்த்தையை மையமாக வைத்தும், குழந்தைகளை மையமாக வைத்தும் ‘லட்டு’ என்ற படம் உருவாகிறது.
கிரிஸ்டல் கிரியேஷன்ஸ் சார்பில் அமுதா ஆனந்த் தயாரிக்கும் இப்படத்தின் இணை தயாரிப்பை ஐரிஸ் புரொடக்ஷன்ஸ் பி.ராதாகிருஷ்னன் கவனிக்கிறார்.
மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரிடம் எடிட்டராக பணியாற்றிய வஜ்ரவேல் ஆனந்த் இயக்கும் இப்படத்தில் ஹீரோவாக குணா பாபு நடிக்கிறார். இவர் ‘இரும்புத்திரை’, ‘தமிழ்ப் படம் 2’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஹீரோயினாக ஸ்வேதா அறிமுகமாகிறார். விஷ்வேஷ்வரன், விக்னேஸ்வரன் என்ற இரட்டை குழந்தை நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் கேடி என்கிற கருப்பு துரை முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்கிறார். இவர் பஞ்சராக்ஷரம் மற்றும் சூப்பர் டூப்பர் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
அம்மா இல்லாத இரட்டையர் இருவரை, சிங்கிள் பேரண்டான தந்தை ஒருவர் மட்டும் எப்படி வளர்க்கிறார் என்பதையும், அதை சார்ந்த இன்னும் பல சுவாரசியமான விஷயங்களையும் இப்படத்தின் கதை பேசுவதாக, இயக்குநர் தெரிவித்தார்.
தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. தொடர்ந்து ஒக்கெனக்கல், திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் ஒரே கட்டமாக தொடர்ந்து 35 நாட்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளனர்.
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...