நடிகர் தனுஷ் கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். அவரது அண்ணனும் இயக்குநருமான செல்வராகவனும் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலமாக இருக்கிறார். தற்போது இவர்கள் கோடிகளில் புரண்டு செல்வ செழிப்பாக வாழ்ந்து வருகிறார்கள்.
ஆனால், இந்த செல்வ செழிப்புக்கு முன்னாள், இவர்கள் கொடிய வறுமையை அனுபவித்து வாழ்த்திருக்கிறார்களாம்.
இது குறித்து இயக்குநர் செல்வராகவன், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவு ஒன்றில், ”கொடூரமான வறுமையில் பிறந்து வளர்ந்தவன் நான். இரு வேளை உண்டால் அரிது. அண்டை வீட்டுக்காரர்களின் அன்பு காப்பாற்றியது. ஆயின் சமூகம் கேலி செய்யும். நீ எல்லாம் என்ன சாதித்துக் கிழிக்கப் போகிறாய் என. எனக்கு தோள் கொடுத்து என் ரசிகர்கள் சாதித்தனர். அதனால் தான் அவர்கள் மட்டுமே என் நண்பர்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வராகவனின் இந்த பதிவால் அவரது ரசிகர்களும், தனுஷ் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கோடுரமான வறுமையில் பிறந்து வளர்ந்தவன் நான்.இரு வேளை உண்டால் அரிது.அண்டை வீட்டுக்காரர்களின் அன்பு காப்பாற்றியது. ஆயின் சமூகம் கேலி செய்யும்.நீ எல்லாம் என்ன சாதித்துக் கிழிக்கப் போகிறாய் என.எனக்கு தோள் கொடுத்து என் ரசிகர்கள் சாதித்தனர்.அதனால்தான் அவர்கள் மட்டுமே என் நண்பர்கள்!🤓🤓
— selvaraghavan (@selvaraghavan) November 30, 2018
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...