தமிழ் சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கும் ஆண்ட்ரியா ‘தரமணி’ என்ற படத்தின் மூலம் பாராட்டை பெற்றாலும், அவருக்கு உடனடியாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் பெரும் ஏமாற்றம் அடைந்தார். இதனால், அவர் தனது அதிருப்தியை தெரிவித்து ஆதங்கப்படவும் செய்தார்.
தற்போது, ஆண்ட்ரியாவுக்கு சில படங்களின் வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. அதில் சில ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாகும்.
இந்த நிலையில், கண் மருத்துவமனை ஒன்றின் திறப்பு விழாவில் ஆண்ட்ரியா கலந்துக்கொண்டார். அப்போது அவரிடம் நிருபர்கள், மீ டூ பற்றி கேள்வி கேட்டார்கள்.
உடனே கோபப்பட்ட ஆண்ட்ரியா, ”மீ டூ வைப் பற்றி ஏங்க கேக்குறீங்க, அது வேணாம், என்னை விட்றுங்க, மீ டு பத்தி நான் சரியா படிக்கலை. எனக்குத் தெரியாமல் நான் ஏதாவது பேசக்கூடாது”, என்று கூறிவிட்டு கிளம்பிட்டாரு.
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...