நடிகரும், சமூக சேவகருமான பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.
‘தப்பாட்டம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான துரை சுதாகர், தற்போது சில முன்னணி இயக்குநர்கள் மற்றும் நடிகர்களின் படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து வருகிறார். நடிப்பு, தொழில் என இரண்டிலும் தீவிரம் காட்டி வரும் துரை சுதாகர், கூடவே சமூக சேவையிலும் தீவிரம் காட்டுவதால் தான், அவருக்கு ‘பப்ளிக் ஸ்டார்’ என்ற பட்டத்தை மக்கள் வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை தானே நேரடியாக சென்று பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் வழங்கி வருகிறார்.
உணவு வழங்குவதை விட, உணவு தயார் செய்து சாப்பிடுவதற்கான பொருட்களை வழங்குவதே சிறந்தது, என்று கருதிய பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், தஞ்சையை சுற்றியுள்ள பல பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு சமைப்பதற்கான உபகரணங்கள் மற்றும் சமையல் பொருட்களை வழங்கியுள்ளார்.
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளான உடனேயே, தனது குழுவினரை அனுப்பி பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நடைபெறும் மீட்பு பணிகளில் பங்குபெற செய்த துரை சுதாகர், தனது நேரடி பார்வையில் பல்வேறு மீட்பு பணிகளை செய்து வந்தார்.
தற்போது மக்களின் அத்தியாவாசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பணியில் ஈடுபட்டுள்ள பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், பிரபல நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சியுடன் இணைந்து தஞ்சையை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...