பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்த ஐஸ்வர்யா தத்தாவும், ஆரியும் ஜோடி சேரும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. சென்னை முகப்பேரில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி சாய் பாபா கோவிலில் பூஜையுடன் சமீபத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் சென்னையில் நடைபெற உள்ளது. மேலும், இரண்டு பாடல்களுக்காக வெளிநாட்டுக்கும் படக்குழுவினர் செல்ல இருக்கிறார்கள்.
60 களில் மதம் காதலுக்கு தடையாக இருந்தது, 80 களில் ஜாதி தடையாக இருந்தது, 2000 ஆம் ஆண்டில் அந்தஸ்து தடையாக இருந்தது. இன்று காதலே காதலுக்கு தடையாக உள்ளது, என்பதை பிரதிபலிக்கும் விதமாக எல்ல தரப்பினரையும் கவரும் கதை களம் தான் இப்படம். கடந்து போன காதலையும், இன்று நடந்து கொண்டிருக்கும் காதலையும் காட்டும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இப்படத்தில், ரசிகர்கள் தங்கள் காதலை கூட பார்க்கும் விதத்தில் படம் உருவாக உள்ளது.
கவிதை நயம் கொண்ட காதல் படமாக உருவாக உள்ள இப்படத்தை ‘அய்யனார்’ படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமித்ரன் இயக்குகிறார். ஏ.ஜி.மகேஷ் இசையமைக்க, தில்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஈ.ஆர்.ஆனந்தன் மற்றும் க்ளோஸ்டார் கிரியேஷன் பி.தர்மராஜ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம், படத்தின் தலைப்பு ஆகியவை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...
கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...