லட்சுமி ராய் என்ற பெயரில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தற்போது ராய் லட்சுமியாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். சுமார் 12 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடிகையாக பயணித்துக் கொண்டிருக்கும் ராய் லட்சுமி, இன்னமும் வளரும் நடிகையாகவே இருப்பது தான் சோகம்.
என்ன தான் கவர்ச்சியில் தாராளம் காட்டினாலும், முக்கியமான ஹீரோயின்களின் பட்டியலிலும், முன்னணி ஹீரோக்களிடன் படங்களிலும் ராய் லட்சுமியால் இடம் பிடிக்க முடியவில்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என்று எந்தப் பக்கம் போனாலும் அம்மணியின் நிலை இதுவாகவே இருக்க, கிடைத்த இந்தி வாய்ப்பை பயன்படுத்தி மேலே வர, அதீத கவர்ச்சியில் நடித்தவருக்கு அங்கேயும் ஏமாற்றம் தான் மிஞ்சியது. இப்படி நடிக்கும் படங்கள் எல்லாம் தோல்விப் படங்களாக இருப்பதால், ராய் லட்சுமிக்கு பட வாய்ப்புகள் ரொம்பவே குறைந்துவிட்டது.
தமிழில் ‘சிண்ட்ரல்லா’ மற்றும் ‘நியா 2’ என இரண்டு படங்களில் நடித்து வரும் ராய் லட்சுமியை ஹீரோயினாக, ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுபவராக மட்டும் இன்றி அம்மாவாகவும் பார்க்க முடியும்.
ஆம், தமிழ் சினிமாவின் அம்மாக்கள் பட்டியலில் தற்போது ராய் லட்சுமியும் இடம் பிடித்துவிட்டார். ஸ்ரீகாந்த் நடிக்கும் ‘மிருகா’ என்ற படத்தில் ராய் லட்சுமி குழந்தைக்கு தாயாக நடிக்கிறார். அதுவும் விதவை தாயாக. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...