தமிழ் மற்றும் தெலுங்கில் இரண்டு சீசன்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்த முடிந்த நிலையில், இந்தியில் தற்போது 12 வது சீசனை பிக் பாஸ் நிகழ்ச்சி எட்டியிருக்கிறது. இதில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் பங்கேற்றுள்ளார். ஆரம்பம் முதல் ஸ்ரீசாந்த் பெரும் சர்ச்சைகளில் சிக்கியதால், பிக் பாஸ் நிகழ்ச்சி படு பரபரப்பாக நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், நேற்று சுரபி ராணா என்பவருடன் ஸ்ரீசாந்த் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சண்டை முற்றியதால், ஸ்ரீசாந்த் சுரபி ராணாவை அடிக்க கை ஓங்கி சென்றார். மேலும், கோபத்தில் பாத்ரூம் சென்று கதவை மூடிக்கொண்டவர், பாத்ரூம் சுவற்றில் மோதிக்கொண்டார். இதனால் அவரது தலையில் வலி ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை ஸ்ரீசாந்தின் மனைவி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என பிக்பாஸ் டீம் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...