தெலுங்கு சினிமாவில் பாலியல் புகார் கூறி பிரபலமான ஸ்ரீரெட்டி, தற்போது சென்னையில் முகாமிட்டு தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். ஆந்திரா ஊடகங்கள் ஸ்ரீரெட்டியின் புகார்களை காதில் வாங்காததால், தமிழகத்திற்குள் எண்ட்ரியான ஸ்ரீரெட்டிக்கு இங்கிருக்கும் ஊடகங்கள் பெரும் வரவேற்பை கொடுத்ததால், அவர் தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் மீது பாலியல் புகார் தெரிவித்தார்.
ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி, ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் என பல முன்னணி பிரபலங்கள் மீது ஸ்ரீரெட்டி கூறிய பாலியல் புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தற்போது ராகவா லாரன்ஸிடம் சினிமா வாய்ப்பு பெற்றிருக்கும் ஸ்ரீரெட்டி, மேலும் சில தமிழ்ப் படங்களில் நடித்து வருவதோடு, சொகுசு கார், ஆடம்பர பங்களா என்று சென்னையில் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருப்பதாகவும், அதற்கு பின்னணியில் பெரிய மனிதர் ஒருவர் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், அவ்வபோது சில அறிக்கைகள் மூலம் கோடம்பாக்க பிரபலங்களிடம் பீதியை ஏற்படுத்தும் ஸ்ரீரெட்டி, தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது, தமிழ் சினிமாவில் உள்ள பெரிய ஆட்களின் ரகசிய வாழ்க்கை முறை பற்றிய அனைத்து தகவல்களும் தனக்கு தெரியும், என்று பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள ஸ்ரீரெட்டி, பல பெண்களிடம் இருந்து பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கை குறித்த தகவலை பெற்றுக் கொண்டிருக்கிறேன். திரைத்துறையை கட்டுப்பாட்டில் வைக்க உதவியாக இருக்கும். பட வாய்ப்புக்காக பெண்கள் படுக்கைக்கு அழைக்கப்படுவதை தடுக்க முடியும், என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், அதே பதிவில், தனக்கு எவ்வளவு ரகசிய தகவல்கள் தெரியும் என்பது அனைவருக்கும் தெரியும், என்றும் ஸ்ரீரெட்டி குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீரெட்டியின் இத்தகைய பேஸ்புக் பதிவால், கோடம்பாக்கம் சற்று பபரபரப்படைந்துள்ளது.
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...