Latest News :

தெறித்து ஓடும் ஜி.வி.பிரகாஷ் படத்தின் டெக்னீஷியன்கள்! - காரணம் இது தான்
Tuesday December-04 2018

கை நிறைய வாய்ப்பு, பாங்க் அக்கவுண்ட் நிறைய பணம், என்று தமிழ் சினிமாவில் குஷியாக இருக்கும் ஹீரோக்களில் ஜி.வி.பிரகாஷும் ஒருவர். அவர் நடிக்கும் படங்களின் பெயர்களை எழுதினாலே ஒரு பத்தி முடிந்துவிடும். அந்த அளவுக்கு ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

 

அப்படி அவர் நடிக்கும் படங்களில் ஒன்று தான் ‘100 % காதல்’. தமன்னா, நாக சைதன்யா நடிப்பில் தெலுங்கில் மாபெரும்  வெற்றி பெற்ற ‘100 % லவ்’ படத்தின் தமிழ் ரீமேக்கான இதில் பிரகாஷ்குமாருக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடிக்கிறார்.

 

இயக்குநர் சுகுமாரின் நண்பரான சந்திரமெளலி இப்படத்தை இயக்குகிறார். இவர், தெலுங்கு சினிமாவின் விநியோகஸ்தர் ஆவார்.

 

விஷயம் என்னனா, இந்த ‘100 % காதல்’ படத்தில் பணியாற்றும் பலருக்கு 10 சதவீதம் கூட சம்பளம் தரவில்லை, என்று இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர் ஒருவர் புலம்பிக் கொண்டிருக்கிறார்.

 

இந்த படத்தை தெலுங்கில் விநியோகம் செய்து நல்ல லாபம் பார்த்த விநியோகஸ்தர் சந்திரமெளலி தான், தமிழில் இப்படத்தை இயக்கினாலும், தயாரிப்பு தரப்பிலும் அவரது கை தான் ஓங்கியிருக்கிறதாம். அதனால், படத்தின் செலவுகளை குறைப்பதாக சொல்லி, வேலை பார்த்தவர்களுக்கு சரியான ஊதியம் கொடுக்காமல் டபாய்க்கிறாராம். அவரது டபாய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர், நடையோ நடந்து தனது ஊதியத்தை பெற முயற்சித்து ரொம்பவே சோர்ந்து விட்டாராம்.

 

இறுதியாக படத்தின் உதவி இயக்குநர் ஒருவரை தொடர்பு கொண்டு, தனது ஊதியம் குறித்து கேட்டதற்கு, ”ஆள விடுங்க, அந்த படத்த பத்தி கேட்காதிங்க, எனக்கும் அதே நிலை தான், அதனால அங்கிருந்து வந்துட்டேன்” என்று அந்த உதவி இயக்குநரும் புலம்பியிருக்கிறார்.

 

இப்படி பலரை ஜி.வி.பிரகாஷின் ‘100 % காதல்’ புலம்ப வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

Related News

3846

ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான ‘காந்தி டாக்ஸ்’!
Saturday March-07 2026

இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர்  இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...

’தடயம்’ இணையத் தொடரின் சாதனை வெற்றி! - கொண்டாடி தீர்த்த ஜீ5
Saturday March-07 2026

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5  பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...

கணிக்க முடியாத காலநிலை! - பிரியங்கா மோகனின் கொரியா அனுபவம்
Saturday March-07 2026

கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...

Recent Gallery