‘களவாணி’ மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான விலம் பல வெற்றிப் படங்களையும், சில தோல்விப் படங்களையும் கொடுத்திருந்தாலும், அவரது சினிமா வாழ்வில் நடந்திராத அதிசயம் ஒன்று தற்போது நடந்திருக்கிறது.
அதாவது, விமல் ஹீரோவாக, ஆஷ்னா சாவேரி ஹீரோயினாக நடித்திருக்கும் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படம் 500 திரையரங்கங்களில் வெளியாகிறது. இது தான் விமலின் வாழ்வில் நடந்திரதாத ஒன்று. இதுவரை விமல் நடித்த எந்த ஒரு படம் இத்தனை திரையரங்குகளில் வெளியானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டும் அல்ல, கேரளாவில் மிகப்பெரிய நடிகர்களின் படங்கள் கூட 100 திரையரங்குகளில் தான் வெளியாகும். ஆனால், இந்த படம் கேரளாவில் மட்டும் 100 க்கும் மேற்பட்ட திரையரங்கங்களில் வெளியாகிறது.
திரையரங்க உரிமையாளர்கள் இப்படத்திற்கு கொடுக்கும் வரவேற்பை பற்றி தான் தற்போது ஒட்டு மொத்த கோலிவுட்டே பரபரப்பாக பேசி வருவதோடு, விமல் வாழ்வில் இது அதிசயம், என்றும் கூறுகின்றனர்.
இப்படி மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம், வரும் டிசம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
நடிகை சர்மிளா மாண்ட்ரே தயாரிக்க, ஏ.ஆர்.முகேஷ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகை பூர்ணா போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பதோடு, கவர்ச்சி நடிகை சன்னி லியோனியின் தங்கை மியா ராய் லியோனியும் கவர்ச்சியின் எல்லையை தாண்டி நடித்திருக்கிறாராம்.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...