மும்பையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நகரத்தில் உள்ள நான்கு நீர்நிலைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருவதல், மும்பை நகரேமே தற்போது தண்ணீரில் தத்தளித்து வருகிறது.
மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மும்பை மற்றும் அதன் புறந்கர் பகுதிகளில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் பேரிடர் மேலாண்மை படையுடன் மும்பை மாநகராட்சி ஊழியர்களும் இணைந்து வெள்ளப் பாதிப்பில் சிக்கிய மக்களை மீட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மும்பை வெள்ளத்தில் நடிகர் மாதவன் சிக்கிக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்தி படம் ஒன்றில் நடித்து வரும் மாதவன், அதன் படப்பிடிப்பிற்காக மும்பையில் முகாமிட்டுள்ளார்.
நேற்று பெய்த பலத்த மழையின் போது நடிகர் மாதவன் காரி சென்றுக் கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அவரது கார் சிக்கிக்கொண்டதாம். வெள்ள்ப்பெருக்கு அதிகமானதால், அவரது கார் பழுதடைந்து நடு ரோட்டில் நின்றுவிட்டதாம்.
இந்த தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்த மாதவன், இந்த மழை நீரை கடந்து எப்படி வீட்டிற்கு செல்வேன், என்று தனது வருத்தத்தையும் தெரிவித்திருந்தார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...