பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் நிஜ காதல் ஜோடிகளாகியிருக்கும் சஞ்சீவ் - ஆல்யா மானாசா தான் தற்போது கோடம்பாக்கத்தின் ஹாட் டாப்பிக்காக இருக்கிறார்கள்.
எப்போதும் போல, முதலில் தங்களது காதல் விவகாரத்தை மறுத்து வந்த இவர்கள் தற்போது தங்களது காதலை வெளி உலகிற்கு அறிவித்திருப்பதோடு, தங்கள் காதல் கதைகள் பற்றி பல ஊடகங்களில் பேட்டியும் கொடுக்க தொடங்கியுள்ளார்கள்.
இந்த நிலையில், பேட்டி ஒன்றில் தங்கள் காதல் பற்றி பேசிய சஞ்வீவ், மானசாவை நடுரோட்டில் சத்தம் போட்டு கத்த வைத்த சம்பவம் ஒன்றை கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
அதாவது, ஆல்யா மானசா ஏதோ தவறு செய்துவிட்டார் என்பதால் சஞ்சீவ் அவரை நடுரோட்டில் இறக்கிவிட்டு மிகவும் சத்தமாக தன்னை காதலிக்கிறேன், என கூற சொன்னாராம். முதலில் கூச்சத்துடன் மெதுவாக சொன்ன ஆல்யாவை சத்தமாக சொல் என சஞ்சீவ் கூற, யாரும் பார்க்காத வண்ணம் சத்தமாக கூறிவிட்டு காருக்குள் ஏறிவிட்டாராம் ஆல்யா.
இந்த சம்பவத்தை இருவரும் கூறி தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...