Latest News :

கூடு விட்டு கூடு பாயும் வித்தையின் மர்மத்தை சொல்லும் ‘பயங்கரமான ஆளு’!
Thursday December-06 2018

தமிழ் சினிமாவில் தற்போது சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்கள் பல வந்தாலும், அவற்றில் சில படங்கள் தான் சில அறிய விஷயங்களோடும், சுவாரஸ்யமான திரைக்கதையோடும் வெளியாகிறது. அப்படி ஒரு சுவாரஸ்யமான திரைக்கதையோடு, கூடுவிட்டு கூடுபாயும் வித்தையின் மர்மத்தை விவரிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் படம் ‘பயங்கரமான ஆளு’.

 

பரிஷித்தா பிக்சர்ஸ் சார்பில் அரசர் ராஜா, தயாரித்து கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் ரிஷா, தாரா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் போண்டா மணி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என அரசர ராஜாவுக்கு அனைத்தும் இது முதல் படமாக இருந்தாலும், அதற்கான அடையாளமே தெரியாத வகையில் படத்தை விறுவிறுப்பாக எடுத்திருக்கிறார்.

 

சித்தர்களை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கும் அரசர் ராஜா, கூடுவிட்டு கூடும் பாயும் வித்தையின் மர்மங்களை உடைத்திருப்பதோடு, அந்த வித்தையின் பின்னணி, அதை எப்படி பயன்படுத்துவார்கள், என்பது பற்றிய பல அறிய விஷயங்களை இப்படத்தில் சொல்லியிருப்பதோடு, முழு படத்தையும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத வகையில் இயக்கியிருக்கிறார்.

 

இப்படத்தின் பாடல்களுக்கு கபிர் அலிகான் இசையமைத்திருக்கிறார். சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்பதால் பின்னணி இசை பிரத்யேகமாக இருப்பதோடு, படத்திற்கு பலம் சேர்க்க வகையில் இருக்க வேண்டும் என்பதால், இசை அரசர் தஷி இப்படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ளார். செல்வமனி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் பாடல்களை தமிழ்க்குமரன் எழுத, கிக்காஸ் காளி சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். சரண் பாஸ்கர் நடனத்தை வடிவமைக்கிறார்.

 

இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படம் வரும் டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது.

Related News

3854

’பருத்தி’ எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது - நடிகை சோனியா அகர்வால்
Saturday December-20 2025

இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...

’சிறை’ என் 25 வது படமாக வருவது மகிழ்ச்சி! - விக்ரம் பிரபு
Friday December-19 2025

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...

மக்கள் பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ‘பராசக்தி’ திரைப்பட உலகம்!
Friday December-19 2025

டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...

Recent Gallery