மலையாள சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர் மஞ்சு வாரியர். இவர் முன்னணி நடிகையாக இருக்கும் போதே நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்ட மஞ்சு வாரியர், தற்போது திலீப்பிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்டதால் மீண்டும் நடித்து வருகிறார்.
ஜோதிகா தமிழில் நடித்த ‘36 வயதினிலே’ படத்தின் ஒரிஜினல் வெர்சனில் மஞ்சு வாரியர் தான் ஹீரோயினாக நடித்திருந்தார். தற்போது பல மலையாளப் படங்களில் நடித்து வரும் அவர், ‘ஜாக் அண்ட் ஜில்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹரிபேடு என்ற பகுதியில் நடைபெற்று வந்திருக்கிறது.
இந்த நிலையில், சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கும் போது மஞ்சு வாரியருக்கு அடிபட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் படப்பிடிப்பு தளத்தில் பயங்கரமான விபத்து ஏற்பட்டதாகவும், அதில் சிக்கிய மஞ்சு வாரியருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மஞ்சு வாரியாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...