இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் அஜித் தொடர்ந்து நடிக்கும் நான்காவது படமாக உருவாகியுள்ள ‘விஸ்வாசம்’ பொங்கலுக்கு வெளியாகிறது. அதே தினத்தில் ரஜினியின் ‘பேட்ட’ படமும் வெளியாக இருப்பதால் போட்டி பலமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தற்போது, ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளும் முடிவடையும் தருவாயில் உள்ளதால், படத்திற்கான புரோமோஷன் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதோடு, வியாபரமும் தொடங்கியிருக்கிறது.
முந்தைய படங்கள் அல்லாம அல்லாமல், இந்த முறை படத்தை கமர்ஷியலாக இயக்கியிருக்கும் சிவா, அஜித் மீது மட்டும் நம்பிக்கை வைக்காமல், பிற நட்சத்திரங்கள் மீதும் நம்பிக்கை வைத்து படத்தை எடுத்திருக்கிறார். அதனால் தான் விஸ்வாசம் படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், ‘விஸ்வாசம்’ படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் படத்திற்கு பெரிய அளவில் புரோமோஷன் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...