’பொண்டாட்டி ராஜ்யம்’, ‘அபிராமி’, ‘வைதேகி வந்தாச்சு’ உள்ளிட்ட சுமார் 25 க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் சரவணன், ’பருத்திவீரன்’ படத்தில் கார்த்திக்கு சித்தப்பாவாக நடித்ததன் மூலம் பருத்திவீரன் சரவணனாக பிரபலமடைந்தவர், தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே, சரவணனுக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளியான தகவல், செய்தியாக வேகமாக பரவியது.
இந்த நிலையில், தான் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலை நடிகர் சரவணன் மருத்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் அளித்திருக்கும் விளக்கத்தில், “நான் சேலத்தில் இருந்த போது காய்ச்சல் இருந்தது, அங்கு சிகிச்சை எடுத்து விட்டு சென்னை வந்த போதும் காய்ச்சல் குணமாகாததால் இங்கு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்துக் கொண்டேன். மூன்று நாட்கள் கழித்து அது சாதாரண காய்ச்சல் தான் என்று சிகிச்சைக்கு பின் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டுக்கு வந்த பின் சில நாட்கள் ஓய்வுக்குப் பின் ஒரு படத்தில் நடித்தும் விட்டேன். இன்னமும் பல பேர் எனக்கு பன்றி காய்ச்சல் இருக்கிறது, என்று போன் செய்து நலன் விசாரிக்கிறார்கள். அப்படி ஒன்றும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்திருக்கிறார்.
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...