தமிழ் சினிமா ஐட்டம் டான்ஸர்களில் முக்கியமானவர் ரிஷா. பல ஆண்டுகளாக பல படங்களில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வரும் ரிஷா, சில படங்களில் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருந்தாலும், அப்போதெல்லாம் பிரபலமாகாதவர், தற்போது ஒரு டான்ஸ் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமாகி வருகிறார்.
அதுவும் அது சாதாரண டான்ஸ் அல்ல, சாவு டான்ஸ். ஆம், நடுரோட்டில் ஆண்களுக்கு இணையாக நடிகை ரிஷா சாவு டான்ஸ் ஆடியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, அந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.
பரிஷித்தா பிக்சர்ஸ் சார்பில் அரசர் ராஜா, தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘பயங்கரமான ஆளு’. சித்தர்களையும், ஆன்மீகத்தையும் மையமாக வைத்து சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ஹீரோ அரசர் ராஜா இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். ஒருவர் சாவு டான்ஸ் ஆடுபவராகவும், மற்றொருவர் டிவி நிருபராகவும் நடித்திருக்கிறார். இவர்களில் சாவு டான்ஸ் ஆடுபவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ரிஷா, ஹீரோவைப் போல சாவு டான்ஸ் ஆடும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அந்த வகையில், பாடல் ஒன்றுக்கு ரிஷா நடுரோட்டில் சாவு கூத்து ஆடும் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
வரும் டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாக உள்ள ‘பயங்கரமான ஆளு’ படத்தில் இடம்பெற்றுள்ள அந்த பாடல் வீடியோ பார்க்க இங்கே க்ளீக் செய்யவும், வீடியோ
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...