மலையாள சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான பிஜிபல் மணியிலின் மனைவி சாந்தி மோகந்தாஸ் உடல்நலக் குறைவால் நேற்று மாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 36.
44 வயதாகும் இசையமைப்பாளர் பிஜிபல், தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்று மலையாள சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். இவர் டான்சரான சாந்தி மோகந்தாஸை கடந்த 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு தேவதத், தயா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இதற்கிடையே, கடந்த 10 நாட்களுக்கு முன்பு சாந்திக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளனர். ஆனால், நேற்று மாலை சுமார் 4 மணிக்கு சிகிச்சை பலன் இன்றி சாந்தி மோகந்தாஸ் உயிரிழந்துவிட்டார்.
புகழ் பெற்ற நடக கலைஞராக திகழ்ந்த சாந்தி மோகந்தாஸ், இளம் வயதில் மரணம் அடைந்திருப்பது கேரள திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...