ரஜினிக்காக காப்பியடித்த அனிருத்! - கலாய்த்த வாரிசு நடிகர்
Monday December-10 2018

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் அனிருத், விஜய், அஜித், ரஜினி என முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வந்தாலும், அவரது பாடல்கள் ஆங்கில பாடல்களின் காப்பி என்று அவ்வபோது விமர்சனங்கள் எழுகின்றன.

 

நயந்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றிப் பெற்ற ‘கோலமாவு கோகிலா’ படத்தில் இடம்பெற்ற “கல்யாண வயசு..” என்ற பாடல் படம் வெளியாவதற்கு முன்பே பெரிய ஹிட்டடித்தாலும், அப்பாடல் ஒரு ஆங்கில ஆல்பத்தின் காப்பி என்று கூறப்பட்டது. இது தொடர்பாக அனிருத்தை நெட்டிசன்கள் மீம்ஸ்கள் மூலம் கலாய்த்தனர்.

 

இந்த நிலையில், ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் அனிருத் இசையமைப்பில் இடம்பெற்றுள்ள மரண மாஸ் பாடல், பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், அப்பாடலும் காப்பி பாடல் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, அப்பாடலில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை வீணடித்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது அதை காப்பி பாடல் என்றும் கலாய்க்க தொடங்கியுள்ளார்கள்.

 

அதுவும் தமிழ்ப் படம் ஒன்றில் இடம்பெற்ற காமெடிக் காட்சியின் பாடல் தான் அது, என்று பிரபல இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜின் மகனும், நடிகருமான சாந்தனு அனிருத்தை கலாய்த்திருக்கிறார்.

 

அதாவது, பாக்யராஜின் வெற்றிப் பெற்ற ‘அந்த 7 நாட்கள்’ படத்தில் அம்பிகாவிடம் பாக்யராஜ் “உனக்கும் எனக்கும் தான் பொருத்தம்...” என்று பாடிக்காட்டுவார். காமெடியாக அமைந்த காட்சியின் டியூனை எடுத்து தான் மரண மாஸ் பாடலில் காப்பியடித்துள்ளார் என்று வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

 

தற்போது, அந்த வீடியோவை நடிகர் சாந்தனு ஷேர் செய்திருப்பதால், அந்த வீடியோ இன்னும் வைரலாக தொடங்கியுள்ளது.

 

 

Related News

3871

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது!
Thursday July-17 2025

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக,  TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில்  பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...

பப்ளிக் ரிவியூ எடுக்க அனுமதிக்க வேண்டாம் - விஷால் கோரிக்கை
Thursday July-17 2025

ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...

கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ரேவதி நடிக்கும் புதிய படம் அறிவிப்பு!
Thursday July-17 2025

தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...

Recent Gallery