கடந்த ஆண்டு தீபாவளியாகட்டும், இந்த ஆண்டு தீபாவளியாகட்டும் அது விஜய் தீபாவளியாகவே முடிந்தது. ‘மெர்சல்’ படத்தை தொடர்ந்து ‘சர்கார்’ படம் மூலம் மீண்டும் ஒரு மாபெரும் வெற்றியை கொடுத்த விஜய், தற்போது தனது 63 வது படத்திற்கு தயாராகிவிட்டார்.
இதற்கிடையே, தமிழகம் மட்டும் இன்றி பல வெளிநாடுகளிலும் வசூலில் சக்கை போடு போட்ட ‘சர்கார்’ இன்னும் சில நாட்களில் 50 வது நாளை தொட இருக்கிறது. இதனை பெரும் விழாவாக கொண்டாட, பல பகுதிகளில் இருக்கும் விஜய் ரசிகர்கள் திட்டமிட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான ரோகினி சில்வர் ஸ்கீரின் திரையரங்கம் மிகப்பெரிய அளவில் கொண்டாட முடிவ் செய்திருக்கிறதாம்.
விஜய், அஜித் என்று இரு உச்ச நடிகர்களின் படங்களை பாராபட்சமின்றி கொண்டாடி வரும் ரோகினி திரையரங்கம், ‘சர்கார்’ படம் மெஹா ஹிட் படம் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், விரைவில் படத்தின் 50 வது நாளை கொண்டாட இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...