தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபல நடிகர்கள் பலருக்கு அரசியல் ஆசை வந்தது எப்படி சாதாரண விஷயமாகிவிட்டதோ அதுபோல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதும் இன்னும் சில நாட்களில் சாதாரண விஷயமாகிவிடும்.
தொலைக்காட்சிகளில் நடிகர், நடிகைகள் தொகுப்பாளர்களாகவும், நிகழ்ச்சியின் நடுவர்களாகவும் இருப்பது புதிதல்ல என்றாலும், முன்னணி நடிகர்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளர்களாக பணியாற்றுவது என்பது புதிதான். நடிகர் கமல்ஹாசன் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளர் அவதாரம் எடுத்த நிலையில், நடிகர் விஷாலும் சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். அவரை தொடர்ந்து சில முன்னணி நடிகைகளும் சில தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், கை நிறைய படங்களோடு பிஸியான முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதியும் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளர் அவதாரம் எடுக்க உள்ளார்.
அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியானாலும், அது எந்த மாதிரி நிகழ்ச்சி என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...