விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளியன்று வெளியான ‘சர்கார்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் மூலமே சர்ச்சை தொடங்கிய நிலையில், படம் வெளியான பிறகு படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் அரசை விமர்சிப்பதாக இருப்பதாக கூறி, ஆளும் அதிமுக அரசு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டது.
அதிமுக அரசால் வழங்கப்பட்ட இலவச மிக்ஸி, ஃபேன் உள்ளிட்டவையை விமர்சனம் செய்யும் விதத்தில் அமைக்கப்பட்ட காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் அரசின் இலவசப் பொருட்களை தவறாக விமர்சித்துள்ளதாக புகார் அளித்திருந்தார்.
தேவராஜன் அளித்த புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...