’கபாலி’ மற்றும் ‘காலா’ என்று இரண்டு படங்களில் புதுவித ரஜினியை பார்த்த ரசிகர்கள், ‘பேட்ட’ படத்தில் மீண்டும் பழைய ரஜினியை பார்க்கப் போகிறார்கள், என்று படக்குழு கூறி வருவது, நடந்தால் நல்லா தான் இருக்கும் என்று ரஜினி ரசிகர்கள் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறார்கள். காரணம், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா என படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் இருப்பதால், இதுவும் ரஜினி படமாக இருக்காதோ, என்று தான் எண்ணத்தோன்றுகிறது.
ஆனால், நாம் சொல்ல வந்த சேது இதுவல்ல, நேற்று முன்தினம் ‘பேட்ட’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட்டது. படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் கலந்துக்கொண்டார்கள். ஆனால், தனுஷ் மட்டும் விழாவை புறக்கணித்துவிட்டார்.
அவருக்கும், ‘பேட்ட’ படத்திற்கும் என்ன சம்மந்தம் என்று யோசிக்கிறீர்களா? பேட்ட படத்தில் தனுஷும் ஒரு பாடல் எழுதியுள்ளார். அனிருத்துடனான அவரது மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவே ரஜினி இப்படி ஒரு வாய்ப்பை அவருக்கு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ரஜினி வாய்ப்பை ஏற்றுக்கொண்டு பாடல் எழுதிய தனுஷ், இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதை மட்டும் தவிர்த்துவிட்டார்.
காரணம், அனிருத் இருக்கும் மேடையிலோ அல்லது நிகழ்ச்சியிலோ பங்கேற்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.
அப்படி என்னதான் பிரச்சினையோ இவர்களுக்குள்.
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...