ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்திருந்தாலும், அதற்கான அறிகுறிகள் இன்னும் தென்படவில்லை. இருப்பினும், அவர் அவ்வபோது சர்ச்சையில் சிக்குவது வழக்கமாகி விட்டது.
இந்த நிலையில், ரஜினிகாந்தின் வீட்டில் வேலை செய்யும் பெண் ஒருவரை ரஜினி உள்ளிட்ட குடும்பத்தார் கொடுமை படுத்தியதாக போட்டோ ஆதரத்துடன் தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘2.0’ மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலிலும் பெரிய சாதனை படைத்துள்ளது. இதுவரை சுமார் ரூ.600 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படும் நிலையில், ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினி உள்ளிட்ட குடும்பத்தார் சமீபத்தில் சென்னை சத்யம் திரையரங்கில் ‘2.0’ படத்தை பார்த்தனர். ரஜினி குடும்பத்தார் படம் பார்க்கும் புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், ரஜினி குடும்பத்தார் படம் பார்க்கும் புகைப்படத்தில் பெண் ஒருவர் நின்றுக்கொண்டிருக்கிறார். அவர் ரஜினிகாந்தின் வீட்டில் வீட்டு வேலை செய்பவராம். சீட் நிறைய காலியக இருந்த போதிலும், அந்த பெண் முழு படத்தையும் நின்றபடியே பார்த்ததாக கூறப்படுகிறது.
இதை கவனித்த நெட்டிசன்கள், படம் முழுவதும் அப்பெண்ணை அமர வைக்காமல், நிற்க வைத்தே ரஜினிகாந்த் குடும்பத்தார் கொடுமை செய்திருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்,
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...