பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, ‘பரி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ப்ரொசித் ராய் என்பவர் இயக்கும் இப்படத்தை அனுஷ்கா சர்மா, தனது கிளீன் ஸ்லேட் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.
நடிப்பதோடு படங்களையும் சொந்தமாக தயாரித்து வரும் அனுஷ்கா சரிமாவின் மூன்றாவது தயாரிப்பான இப்படத்திற்உ அனுபம் ராய் இசையமைக்கிறார்.
நேற்று இரவு படப்பிடிப்பின் போது படப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்துக் கொண்டிருந்த ஊழியர் மீது மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, இந்த சம்பவத்தின் போது படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனுஷ்கா சர்மா, இந்த விபத்தையும் உயிர் பலியையும் பார்த்து மிரண்டு போனதுடன், தற்போது அதிர்ச்சியில் இருந்து வெளியே வராமல் இருக்கிறார்.
இந்த சம்பவத்தால் ‘பரி’ படப்பிடிப்பு ஒரு சில நாட்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...