ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் நடைபெறும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.75 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை வழங்கப்பட்டு வந்த நிதியை விட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்பிரிசியேஷன் பவுன்டேஷன் பொதுச் செயலாளர் தங்கராஜிடம் ரூ.75 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் நிதி வழங்கி வந்த நிலையில், அதை ரூ.75 லட்சமாக உயர்தி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...