தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவான விஜய் சேதுபதி, ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
இதில், படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் கலந்துக்கொண்டனர். விஜய் சேதுபதியும் இதில் கலந்துக்கொண்டார் என்றாலும், அவர் ரொம்பவே லேட்டாகவே நிகழ்ச்சிக்கு வந்தார். லேட்டாக வந்தாலும், அவருக்காக கிடைத்த கைதட்டல், இசை வெளியீட்டு நடைபெற்ற அரங்கையே அதிர வைத்துவிட்டது.
மேலும், இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு விஜய் சேதுபதி தனி ஹெலிகாப்டரில் வந்தார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஆம், வேறு ஒரு படத்தின் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி தீவிரமாக ஈடுபட்டிருந்ததால், பேட்ட இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வர முடியாத சூழல் உருவானதாம். ஆனால், அவரை எப்படியாவது நிகழ்ச்சிக்கு வரவைக்க வேண்டும் என்று முடிவு செய்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், அவருக்காக தனி ஹெலிகாப்டர் ஒன்றை அனுப்பு அதன் மூலம் அவரை நிகழ்ச்சிக்கு அரங்குங்கு அழைத்து வந்ததாம். பிறகு நிகழ்ச்சி முடிந்ததும், அதே ஹெலிகாப்டர் மூலம் விஜய் சேதுபதி படப்பிடிப்பு தளத்திற்கு திரும்பி சென்றாராம்.
“லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா” வருவேன் என்று ரஜினிகாந்த் வார்த்தையாக மட்டுமே சொல்ல, விஜய் சேதுபதியோ அதை செயல்படுத்தியே விட்டாரே, என்று ஒட்டு மொத்த கோலிவுட்டும் பேசி வருகிறதாம்.


இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...