சினிமாவில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்து நடிகைகள் வெளிப்படையாக பேச தொடங்கியுள்ள நிலையில், அவர்களுக்கு சினிமா தவிர்த்து வேறு சில நபர்களால் வரும் மறைமுக சீண்டல்கள் குறித்தும் வெளியுலகிற்கு தெரிய வைத்து வருகிறார்கள்.
அந்த வகையில், பிரபல மலையால நடிகையான காயத்ரியை ஒரு நபர் படுக்கைக்கு அழைத்த சம்பவத்தை அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டதோடு, தன்னை படுக்கைக்கு அழைத்தவரையும் அலறவிட்டுள்ளார்.
’பரஸ்பரம்’ என்ற மலையாள தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமானவர் காயத்ரி அருண். தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பது மட்டும் இன்றி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில், நெட்டிசன் ஒருவர் காயத்ரியிடம், ரூ.2 லட்சம் தருகிறேன், ஒரு இரவு மட்டும் என்னுடன் வர முடியுமா? இது நமக்குள் இருக்கும். ஒரு மணி நேரத்திற்கு ரூ.2 லட்சம் தருகிறேன், என்று கேட்டு அவரது இன்ஸ்டாகிராமில் மெசஜ் அனுப்பியிருக்கிறார்.
ரோஹன் குரியகோஸ் என்ற நபர் அனுப்பிய அந்த மெசஜை ஸ்கிரீன்ஷாட் எடுத்த காயத்ரி, அதை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு, அதனதுடன், “மிஸ்டர் ரோஹன் குரியகோஸ், உங்களின் தாய் மற்றும் சகோதரியின் பாதுகாப்புக்காக நான் நிச்சயம் பிரார்த்தனை செய்வேன்” என்றும் பதிவிட்டுள்ளார்.
காயத்ரியின் இந்த பேஸ்புக் பதிவை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருவதோடு, அவரிடம் வாலாட்டிய ரோஹனுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், அவர் குறித்து போலீசில் புகார் தெரிவிக்க வேண்டும், என்று பலர் கூறியுள்ளனர்.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...