’பாரதி கண்ணம்மா’, ‘பொற்காலம்’ என்று இயக்குநராக பல வெற்றிப் படங்களைக் கொடுத்த சேரன், இயக்குநராகவும் ஹீரோவாகவும் ‘ஆட்டோகிராப்’, ‘தவமாய் தவமிருந்து’ போன்ற வெற்றிப் படங்களையும் கொடுத்திருக்கிறார். இயக்கம் மற்றும் நடிப்பு என்று இரண்டிலும் வெற்றி பெற்று வந்தவர், தற்போது தான் இயக்கி நடிக்கும் படத்திற்கு ‘திருமணம்’ என்று தலைப்பு வைத்துள்ளார்.
பிரன்னிஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் பிரேம்நாத் சிதம்பரம் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் சேரன் படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். மற்றொரு முக்கிய வேடத்தில் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நடிக்கிறார். இவர்களுடன் சுகன்யா, தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், காவ்யா சுரேஷ், ஜெயபிரகாஷ், மனோபாலா, பாலசரவணன், சீமா ஜி.நாயர், அனுபமா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். பொன்வேல் தாமோதரன் படத்தொகுப்பு செய்ய, யுகபாரதி, லலிதானந்த், சேரன் ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள். அசோக்ராஜன், பாலகுமார், ரேவதி, சஜன நஜம் ஆகியோர் நடனம் அமைக்கின்றார்கள்.
இப்படத்தின் பஸ்ட் லுக் வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி கலந்துக்கொண்டு ‘திருமணம்’ படத்தின் பஸ்ட் லுக்கை வெளியிட்டார்.
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...