தொலைக்காட்சி சீரியல் நடிகைகள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளினிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. இதில் சில மரணங்களுக்கு பின்னணியில் சில மர்மங்களும் நீடிக்கிறது.
இந்த நிலையில், ராஜாஸ்தான் ஜீ டிவியை சேர்ந்த நிகழ்ச்சி தொகுப்பாளினி ராதிகா கெளசிக், நேற்று அதிகாலை 3.30 மணியளவில் 4 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளாக நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ராதிகா, அந்த வீட்டில் தான் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ராதிகாவுடன் அவரது நண்பரான டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ராகுல் என்பவரும் வசித்து வந்தது தெரிய வந்துள்ளது. மேலும், சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் ராகுல் மற்றும் ராதிகா இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றதாம். ராகுல் பாத்ரூம் சென்ற போது தான் ராதிகா மாடியில் இருந்து குதித்ததாகவும் கூறப்படுகிறது.
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...