அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வாசம்’ பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியுள்ள நிலையில், தற்போது அவரது 59 வது படம் குறித்து அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏற்கனவே வெளியான தகவலின்படி, ‘பிங்க்’ என்ற இந்தி படத்தின் தமிழ் ரீமேக் தான் அஜித்தின் 59 வது படம். அதை இயக்கப் போவது ‘தீரன் அதிகாரம் ஒன்று’ பட இயக்குநர் வினோத் தான்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், பாலிவுட் தயாரிப்பாளருமான போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் எளிமையான முறையில் நடைபெற்றது. இதில் படத்தின் தொழில்நுட கலைஞர்கள் சிலரும், நடிகர்கள் சிலரும் கலந்துக்கொண்டனர்.
மேலும், பிரபல தொலைக்காட்சி செய்தி ஆசிரியரான ரங்கராஜ் பாண்டேவும், இந்த பூஜையில் கலந்துக்கொண்டார். விசாரித்ததில், அவர் படத்தில் முக்கியமான வேடம் ஒன்றில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், அவர் எந்த மாதிரியான வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், ரங்கராஜ் பாண்டே அஜித் படத்தில் நடிக்கும் வேடம் பற்றி தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அவர் வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கிறாராம். அதுவும் அஜித்தை எதிர்க்கும் வழக்கறிஞராம்.
இப்படத்தில் அஜித் வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கிறார். அஜித்துடன் நீதிமன்றத்தில் மல்லுக்கட்டும் எதிர்தரப்பு வழக்கறிஞர் வேடத்தில் தான் ரங்கராஜ் பாண்டே நடிக்கிறார்.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...