தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் என்று சொல்வதை விட, நடிக்க தெரிந்த நடிகைகளில் முக்கியமானவர் என்று சொன்னால் தான் அர்ச்சனாவுக்கு பொருத்தமாக இருக்கும். எதார்த்தமான வேடங்களில், தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த அர்ச்சனா, விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.
சீதக்காதியில் தனது கதாபாத்திரம் மற்றும் படம் குறித்து நம்மிடையே பேசிய அர்ச்சனா, “நீங்கள் பொருள் தேடி ஓடாத, கலைஞர் ஒருவரின் ஆன்மாவாக இருக்கையில், அது ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலை. இது தியாகம் என்று சொல்ல முடியாது, ஆனால் கலையை நேசிக்கும், சுவாசிக்கும் ஒருவரின் துணையாக, பக்க பலமாக இருக்கும் ஒரு பொறுப்பு. நான் அப்படிப்பட்ட உணர்ச்சிகளுக்குள் கட்டுண்டு கிடப்பது 'அய்யா' என்று அழைக்கப்படும் ஒரு மனிதனால் தான். சீதக்காதியில் என் கதாபாத்திரம் மகிழ்ச்சி, துக்கம், அச்சம் ஆகிய உணர்ச்சிகளை கொண்ட ஒன்று.
நான் முன்பே சொன்ன மாதிரி அது அய்யா, அவரை விஜய் சேதுபதியிடம் இருந்து பிரிக்க பார்க்க முடியவில்லை. இது படப்பிடிப்பின் போது மட்டுமல்ல, படத்தின் காட்சிகளையும், புகைப்படங்களையும் பார்க்கும் போது, இருவரையும் பிரித்து பார்க்க முடியவில்லை. அது எனக்கு மட்டுமல்ல குழுவில் உள்ள அனைவருக்கும் மற்றும் பார்வையாளர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

இதுபோன்ற ஒரு தனித்துவமான கதையை சிந்திக்க, அவருக்கு எது உந்துதலாக இருந்திருக்கும் என படப்பிடிப்பு முழுக்க நான் ஆச்சர்யப்பட்டேன். சமகால தலைமுறை இயக்குநர்கள் வழக்கமான முறையில் படம் எடுக்க, கவனம் செலுத்தும் நேரத்தில் பாலாஜி தரணிதரனின் சிந்தனை, என்னை வியப்பில் ஆழ்த்தியது. நிச்சயமாக, அவர் தான் 'அய்யா'வின் படைப்பாளி. அவரை மக்கள் கொண்டாட வேண்டும் என்று நான் நம்புகிறேன்.” என்றார்.
விஜய் சேதுபதி 75 வயது நாடக கலைஞராக நடித்துள்ள இந்த படத்தை பேஸ்ஸன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. சமீபத்திய சென்சேஷன் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். டிசம்பர் 20ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...
கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...