தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்காக நிதி திரட்ட 'இசையராஜா 75' விழா நடத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது.
இத்தனை ஆண்டு காலம் இசையில் தொடர் சாதனை புரிந்து வரும் 'இசைஞானி' இளையராஜாவைப் கௌரவிக்கும் பொருட்டு இவ்விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளது.
இவ்விழா வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. (YMCA) மைதானத்தில் நடைபெறவுள்ளது.
'இசையராஜா 75' விழாவிற்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளை சார்ந்த முக்கிய பிரபலங்களை நேரில் சென்று அழைப்பு விடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது.
இதன் முதல் கட்டமாக தமிழ் திரையுலக பிரமுகர்களை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை சார்ந்தவர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்கள்.
இந்த பிரம்மாண்ட விழா Feb 2, 3 நாட்களில் YMCA-வில் நடைபெறுகிறது. விழா நடைபெறும் குறிப்பிட்ட 2 நாட்களுக்கு அனைத்து படப்பிடிப்பிற்கும் விடுமுறை . தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்.
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...