பல மலையாள திரைப்படங்களிலும், டிவி சீரியல்களிலும் நடித்து பிரபலமான அஸ்வதி பாபு என்ற மலையாள நடிகை போதை பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
22 வயதாகும் அஸ்வதி பாபு, பல மலையாள திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருவதோடு, தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.
கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அஸ்வதி பாபுவிடம் எக்ஸ்டசி என்ற போதைப் பொருள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து நேற்று அஸ்வதியின் வீட்டில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்ட போது, அவரது வீட்டில் பல லட்சங்கள் மதிப்புள்ள எக்ஸ்டசி போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசார் அஸ்வதி மற்றும் அவரது கார் டிரைவர் பினாயை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பினாய் தான் பெங்களூரில் இருந்து அந்த போதைப் பொருளை வாங்கி வந்து அஸ்வதியிடம் கொடுத்துள்ளார்.
ரகசிய தகவல் கிடைத்த பிறகு போலீசார் அஸ்வதியை சில வாரங்களாக கண்காணித்துள்ளனர். அதன் பிறகே நேற்று அஸ்வதியும், பினாயும் கையும் களவுமாக சிக்கியுள்ளனர். இந்த போதைப் பொருள் நெட்வொர்க் பெரியதாக இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...