Latest News :

புரோக்கராக மாறிய விமல்!
Monday December-17 2018

‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்தை தொடர்ந்து விமல் அடுத்து நடிக்கும் படத்திற்கு ‘புரோக்கர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சதா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டார்ச் லைட்’ படத்தை இயக்கிய மஜீத் இப்படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கனவே விஜயின் ‘தமிழன்’, ‘பைசா’ ஆகிய படங்களையும் இயக்கியிருக்கிறார்.

 

இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக ‘அண்ணாதுரை’ படத்தில் ஹீரோயினாக நடித்த டயானா சாம்பிகா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, வினோத், தம்பி ராமையா, மயில்சாமி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

 

திருமணத்துக்குப் பெண் பார்க்கும் தரகர் சம்மந்தப்பட்ட கதை. திருமணம்  சார்ந்த பின்னணியில் படம் உருவாவதால் கலகலப்புக்கும், விறுவிறுப்புக்கும் படத்தில் பஞ்சமிருக்காது, என்று கூறும் இயக்குநர், படம் முழுவதும் நட்சத்திர பட்டாளங்கள் நிறைந்திருப்பதால், காமெடி திருவிழாவாகவும் படம் இருக்கும், அதனால் நம்பி வாங்க சந்தோஷமாக போங்க, என்றார்.

 

கான்பிடண்ட் பிலிம் கேஃப் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.

Related News

3908

ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான ‘காந்தி டாக்ஸ்’!
Saturday March-07 2026

இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர்  இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...

’தடயம்’ இணையத் தொடரின் சாதனை வெற்றி! - கொண்டாடி தீர்த்த ஜீ5
Saturday March-07 2026

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5  பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...

கணிக்க முடியாத காலநிலை! - பிரியங்கா மோகனின் கொரியா அனுபவம்
Saturday March-07 2026

கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...

Recent Gallery