ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘2.0’ உலகம் முழுவதும் 1000 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் குறித்து சில எதிர்மறையான விமர்சனங்கள் வெளியானாலும், சிறுவர்களுக்கு பிடித்து போனதால், படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ.500 கோடி வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில்,
சென்னை மாநகரில் மட்டும் 3-வது வாரமாக சுமார் 80 திரைகளில் 2.0 ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது சென்னையில் வசூல் ரூ.30 கோடியை தாண்டிவிட்டதாக சொல்கிறார்கள். சென்னையை பொறுத்த வரை இது சாதனை வசூல் ஆகும். இதற்கு முன்பு கபாலி 3-வது வாரத்தில் சென்னையில் வசூல் செய்த ரூ.18 கோடி சாதனையாக பார்க்கப்பட்டது.
உலகம் முழுவதும் தமிழ் மொழி பதிப்பில் ரூ.461 கோடியையும் தெலுங்கு, இந்தி பதிப்புகள் சேர்ந்து ரூ.285 கோடியையும் வசூலித்திருப்பதாக கூறுகின்றனர். மொத்த வசூல் ரூ.750 கோடியை கடந்திருப்பதாக கூறுகின்றனர்.
தமிழகத்தில் அரையாண்டு விடுமுறைக்குப் பின்னும், உலக அளவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையினாலும் சுலபமாக ரூ.1000 கோடியை தொடும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். அப்படி தொட்டால், அது இந்திய சினிமாவின் பெரும் சாதனையாக கருதப்படும்.
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...