Latest News :

ரஜினியின் அடுத்த ஸ்டெப்! - அப்செட்டில் ரசிகர்கள்
Tuesday December-18 2018

அதிகமான படங்கள் நடிக்க வேண்டிய காலகட்டத்தில், இரண்டு ஆண்டுக்கு ஒரு படம் நடித்து ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்த ரஜினிகாந்தின் தற்போதைய நடவடிக்கைகளால் அவரது ரசிகர்கள் ரொம்பவே அப்செட்டாகியுள்ளனர்.

 

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல நடிகர்கள் தங்களது அரசியல் ஆசையை வெளிக்காட்டியது போல ரஜினிகாந்தும் நேரடி அரசியல் பிரவேசத்தில் ஈடுபட்டார். ஆனால், அவர் ஆரம்பிக்க உள்ள அரசியல் கட்சி குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடாதவர், அரசியல் சம்மந்தமான எந்த ஒரு நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் இருக்கிறார்.

 

இதனால், ரஜினிகாந்த் எப்போதும் போல, ”வரேன்...வரேன்...” என்று கூறுக்கொண்டு வராமால் இருந்துவிடுவாரோ! என்று தமிழக மக்கள் மட்டும் இன்றி அவரது ரசிகர்களும் நினைக்க தொடங்கிவிட்டார்கள். அதனை நிரூபிக்கும் வகையில், ரஜினிகாந்த் அடுத்தடுத்த புது படங்களில் நடிப்பதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

 

இயக்குநர் ப.ரஞ்சித் இயக்கத்தில் தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்தவர், அடுத்ததாக் ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் நடித்து முடித்தார். இப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்து முடித்துவிட்டார். இப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ள நிலையில், ரஜினிகாந்தின் அடுத்த புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது.

 

அடுத்ததாக ரஜினிகாந்த் முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில், இந்த தகவலை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உறுதிப்படுத்தியுள்ளார். அடுத்ததாக தான் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்குவதாக முருகதாஸ், அறிவித்திருக்கிறார்.

 

முருகதாஸின் இந்த அறிவிப்பை கேட்ட ரஜினிகாந்த் ரசிகர்கள் சந்தோஷத்திற்கு பதிலாக துக்கமடைந்துள்ளனர். காரணம், தங்களது தலைவர்  அரசியல் கட்சி குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல் தொடர்ந்து இப்படி படங்களில் நடித்து வருகிறாரே!, என்பது தான் அவர்களின் துக்கத்திற்கு காரணமாம்.

Related News

3911

’பருத்தி’ எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது - நடிகை சோனியா அகர்வால்
Saturday December-20 2025

இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...

’சிறை’ என் 25 வது படமாக வருவது மகிழ்ச்சி! - விக்ரம் பிரபு
Friday December-19 2025

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...

மக்கள் பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ‘பராசக்தி’ திரைப்பட உலகம்!
Friday December-19 2025

டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...

Recent Gallery