தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜயகாந்த், சினிமாவில் இருந்து ஒதுங்கி முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பு வகித்த அவர், தற்போது அரசியலிலும் அவ்வளவாக ஈடுபடுவதில்லை. காரணம், அவரது உடல் நிலை.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நிலை பாதிக்காப்பட்ட விஜயகாந்த், வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை மேற்கொண்ட பிறகு அரசியல் நிகழ்வுகளில் ஈடுபடாமல் இருந்தார். பிறகு சில ஆண்டுகள் சிகிச்சைகளுக்குப் பிறகு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கியவர், தமிழக அரசியல் குறித்து அவ்வபோது சில அறிக்கைகளையும் வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில், விஜயகாந்தின் உடல் நிலை மீண்டும் மோசமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்காவுக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்.
நேற்று இரவு தனது மனைவி மற்றும் மகனுடன் அமெரிக்கா புறப்பட்டிருக்கும் விஜயகாந்துக்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்ட உள்ளது என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...