தமிழ் சினிமாவகட்டும், தமிழக அரசியலாகட்டும் இரண்டிலும் முக்கியமான இடத்தை பிடித்தவர் ஜெயலலிதா. அரசியலில் இந்தி அளவில் பெயர் பெற்ற இவரது மறைவும், கடைசி நாட்களும் யாரும் எதிர்பாரத ஒன்றாக அமைந்துவிட்டது.
தற்போது, ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க பலர் களத்தில் இறங்கியுள்ளனர். இயக்குநர் மிஷ்கினின் உதவியாளராக பணியாற்றிய பிரியதர்ஷினி என்ற பெண் இயக்குநர் ‘தி அயர்ன் லேடி’ என்ற தலைப்பில் ஜெயலலிதா வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க உள்ளார். இதில் ஜெயலலிதாவாக மலையாள நடிகை நித்யா மேனன் நடிக்கிறார். மேலும் சில இயக்குநர்களும் ஜெயலலிதாவின் வாழ்க்கை திரைப்படத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவரான கெளதம் வாசுதேவ் மேனனும் ஜெயலலிதாவின் வாழ்க்கை படத்தை எடுக்க களத்தில் இறங்கியுள்ளார். ஆனால், அவர் அதை திரைப்படமாக அல்லாமல் வெப் சீரியசாக எடுக்க இருக்கிறார்.
இதில் ஜெயலலிதா வேடத்தில் ‘பாகுபலி’ படத்தில் சிவகாமியாக கலக்கிய ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருக்கிறார்.sa
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...