தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக உள்ள விஜய் சேதுபதி கதை தேர்வில் கெட்டிக்காரர், என்று பெயர் எடுத்திருக்கிறார். இதனால் இவர் நடித்த படம் என்றால் நிச்சயம் பார்க்கலாம், என்ற நம்பிக்கையோடு ரசிகர்கள் தியேட்டருக்கு வருகிறார்கள். அதற்கு ஏற்றவாறு விஜய் சேதுபதியும் கதைக்காக எந்த வேடமாக இருந்தாலும், எப்படி நடிக்க வேண்டுமானாலும் நடிக்க ரெடியாகவே இருக்கிறார்.
அந்த வரிசையில், விஜய் சேதுபதி 75 வயது முதியவர் வேடத்தில் நடித்திருக்கும் ‘சீதக்காதி’ பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.
இப்படத்தின் புரோமோஷனுக்காக பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டியளித்து வரும் விஜய் சேதுபதி, பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனது முதல் படத்தின் போது ஒருவர் தனது வாயில் சிறுநீர் கழித்தார், என்று கூறி பகீர் கிளப்பியுள்ளார்.
இது குறித்து மேலும் கூறிய விஜய் சேதுபதி, ”வர்ணம் என்ற படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. முதல் படமான அதில் பின் தங்கிய வகுப்பை சேர்ந்தவராக நடித்தேன். அப்படத்தில் எனது முதல் காட்சி என்னவென்றால் என் வாயில் ஒருவர் சிறுநீர் கழிப்பார், அது தான். அந்த காட்சியில் நடித்த பிறகு அங்கிருந்த அனைவரும் கைதட்டினார்கள். ஒரு நடிகை ஊக்குவிப்பது கைத்தட்டல்களும் பாராட்டுகளும் தான்.” என்று தெரிவித்தார்.
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...