Latest News :

’சர்கார்’ நிகழ்த்திய புதிய சாதனை! - உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்
Thursday December-20 2018

தீபாவளிக்கு வெளியான விஜயின் ‘சர்கார்’ பல சர்ச்சைகளை எதிர்கொண்டாலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

 

மேலும், படம் வெளியாவதற்கு முன்பாக டிஜிட்டல் உலகில் பல்வேறு சாதனைகளை செய்தது. அதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான பாடல்களும் உண்டு. 

 

தற்போது 2018 ஆம் ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில்,  சர்கார் மூலம் விஜய் யாரும் அசைக்க முடியாத சாதனையோடு இந்த ஆண்டை நிறைவு செய்கிறார்.

 

ஆம், “ஒரு விரல் புரட்சி” பாடல் இணையத்தில் பெரும் புரட்சி செய்த நிலையில், தற்போது இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீடியோ, “Most anticipated video of the year” என்ற சிறப்பை பெற்றுள்ளதாக பாடல்களை வெளியிட்ட சோனி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Related News

3922

ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான ‘காந்தி டாக்ஸ்’!
Saturday March-07 2026

இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர்  இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...

’தடயம்’ இணையத் தொடரின் சாதனை வெற்றி! - கொண்டாடி தீர்த்த ஜீ5
Saturday March-07 2026

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5  பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...

கணிக்க முடியாத காலநிலை! - பிரியங்கா மோகனின் கொரியா அனுபவம்
Saturday March-07 2026

கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...

Recent Gallery