தமிழ் சினிமாவின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக உள்ள விஜய் சேதுபதியில் நடிப்பில் உருவாகியுள்ள ‘சீதக்காதி’ நேற்று உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி 75 வயது முதியவ வேடத்தில் நடித்திருக்கிறார்.
இதற்கிடையே, இப்படத்திற்கான புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டிருக்கும் விஜய் சேதுபதி, ஊடகங்களுக்கு அளித்து வரும் பேட்டியில் தனது வாழ்வில் நடந்த சில சுவாரஸ்யமான அதே சமயம் கசப்பான அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்துக்கொள்கிறார்.
அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், ”2018 ஆண்டு எப்படி போனது?” என்ற கேள்விக்கு, “இந்த ஆண்டு திருப்திகரமாகத்தான் இருந்தது. ஆனால், பண ரீதியாக மிகப்பெரிய பின்னடைவை சந்தித்திருக்கிறேன். காரணங்கள் என்ன என்று சரியாகத் தெரியாமல் ரூ.11 கோடியை இழந்திருக்கிறேன்.” என்றார்.
விஜய் சேதுபதி நடிப்பில் வெற்றிபெற்ற ‘96’ படத்தின் தயாரிப்பாளரின் கடன் தொடர்பாக விஜய் சேதுபதி தனது சம்பளத்தில் இருந்து சுமார் ஒன்றரை கோடி ரூபாயை விட்டுக்கொடுத்ததோடு, தான் தயாரித்து நடித்த ‘ஜுங்கா’ படத்தின் மூலமாகவும் நஷ்ட்டம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...