நேரடி அரசியலில் இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், விரைவில் தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் குறித்து அறிவிக்க உள்ளார். அதே சமயம், நடிப்பிலும் தீவிரம் காட்டி வரும் அவரது அரசியல் அறிவிப்புக்காக, அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே, ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சிக்காக தொலைக்காட்சி ஒன்றை தொடங்க இருப்பதாகவும், அந்த தொலைக்காட்சிக்கு தந்தி டிவி-யில் பணிபுரிந்து வந்த ரங்கராஜ் பாண்டே தலைமை பொறுப்பு ஏற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ரஜினிகாந்த் தொடங்க உள்ள தொலைக்காட்சி குறித்து அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்கா சென்றிருக்கும் ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “வேறு யாரும் பதிவு செய்துவிடக்கூடாது என்பதற்காக தற்போதே எனது பெயரில் தொலைக்காட்சிக்கான பெயரை பதிவு செய்துள்ளோம். கட்சி ஆரம்பித்த பிறகு கூட்டணி பற்றி பேசலாம்.” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது ரஜினிகாந்த் தனது தொலைக்காட்சிக்காக ‘சூப்பர் ஸ்டார் டிவி’, ‘ரஜினி டிவி’, ‘தலைவர் டிவி’ என மூன்று பெயர்களை பதிவு செய்துள்ளார். அதனால், இந்த மூன்றில் ஒரு பெயரில் தான் அவரது தலைக்காட்சி இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...