Latest News :

’விஸ்வாசம்’ படத்திற்கு கிடைத்த சான்றிதழ்! - தயாரிப்பாளர் மகிழ்ச்சி
Monday December-24 2018

சிவா இயக்கத்தில் அஜித் தொடர்ந்து நான்காவது படமாக நடிக்கும் ‘விஸ்வாசம்’ பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. சிவா - அஜித் கூட்டணியில் உருவான மற்ற மூன்று படங்களைக் காட்டிலும் இப்படம் வித்தியாசமான அதே சமயம் கமர்ஷியலாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

இந்த நிலையில், சமீபத்தில் தணிக்கை குழுவினருக்கு படம் திரையிடப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் யு சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.

 

இது குறித்து தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் கூறுகையில், “எங்களது நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் குடும்பத்தோடு வந்து பார்க்கும் வகையில் படங்களை தருவதில் மிகவும் முனைப்போடு இருப்போம். தற்போது எங்களது தயாரிப்பில் வெளியாக உள்ள ‘விஸ்வாசம்’ படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்திருப்பது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. எங்கள் நிறுவனத்தின் சார்பில் நாயகன் அஜித் குமார் சாருக்கும், இயக்குநர் சிவாவுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. அவர்கள் இருவரும் தூண்களாக இருந்து உழைத்து இருக்கிறார்கள். எல்லா தரப்பினரையும் கவரும் படமாக விஸ்வாசம் அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இசை அமைப்பாளர் டி இமானின் இசை பொங்கல் கொண்டாட்டத்துக்கு உகந்தவாறு பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறது. மாநகரம் முதல் குக்கிராமம் வரை பட்டி தொட்டி எங்கும் இந்த படத்தின் பாடல்கள் சேம ஹிட்.” என்றார்.

 

நயந்தாரா, விவேக், தம்பி ராமையா, யோகி பாபு, ரமேஷ் திலக், ரோபோ சங்கர், ரமேஷ் திலக், அனைக்கா, கோவை சரளா, மதுமிதா என மிக்கப்பெரிய நட்சத்திர கூட்டம் நடித்திருக்கும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன், செல்வி தியாகராஜன், செந்தில் தியாகராஜன்,  அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

Related News

3937

’பருத்தி’ எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது - நடிகை சோனியா அகர்வால்
Saturday December-20 2025

இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...

’சிறை’ என் 25 வது படமாக வருவது மகிழ்ச்சி! - விக்ரம் பிரபு
Friday December-19 2025

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...

மக்கள் பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ‘பராசக்தி’ திரைப்பட உலகம்!
Friday December-19 2025

டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...

Recent Gallery