கேரளாவில் மட்டும் இன்றி தென்னிந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற மலையாளப் படமான ‘பிரேமம்’ படத்தின் கூட்டணி அடுத்ததாக இணைந்துள்ள படம் ’ஜண்டுகளூடே நட்டில் ஓரிடவேளா’. இந்த வருடத்தின் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மலையாளப் படமாக கருதப்படும் இப்படத்தில், பிரேமம் பட ஹீரோ நிவின் பாலியும், அப்படத்தில் அவரது நண்பராக நடித்த அல்தாப் சலீமும் இணைந்து நடித்துள்ளனர்.
‘ஆக்ஷன் பிஜு’ படத்தை தயாரித்த நிவின் பாலி, இரண்டாவதாக தயாரித்துள்ள படம் ‘ஜண்டுகளூடே நட்டில் ஓரிடவேளா’ படமே. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசரும், “எந்தாவூ...” பாடலும் பெரிய ஹிட் ஆகியுள்ளது.
இப்படத்தில் ஹீரோயினாக புதுமுகம் ஐஸ்வர்யா லஷ்மி நடிக்க, முன்னாள் பிரபல நடிகை ஷாந்தி கிருஷ்ணன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் மூலம் நடிக்க தொடங்கியுள்ளார். இவரது வருகையாலும், ‘பிரேமம்’ பாய்ஸின் கூட்டணியாலும் எதிர்ப்பார்ப்பை எற்படுத்தியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...