21ம் நூற்றாண்டு இளைஞரக்ளின் சாகசக் கதைகளை மையமாக வைத்து உருவாகும் படம் ‘ழகரம்’. இதில் ஹீரோவாக நந்தா நடிக்கிறார்.
பத்ரகாளி, முள்ளும் மலரும், 47 நாட்கள், மோகமுள், சொல்ல மறந்த கதை, பரதேசி, அரவான், விசாரணை போன்ற நாவல்களை வைத்து படமாகப்பட்ட படங்கள் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றுள்ளன. பல விருதுகளையும் வென்றுள்ளன. அந்த வரிசையில், பல விருதுகளை வென்ற ‘ப்ராஜெக்ட் ஃ’ நாவல் ‘ழகரம்’ என்ற தலைப்பில் திரைப்படமாகிறது.
பால் டிப்போ கதிரேசன் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் க்ரிஷ் இயக்குகிறார். நந்தா ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கு தரன் இசையமைக்கிறார்.
அதிசயப் புதையலைத் தேடிச்செல்லும் 21ம் நூற்றாண்டு இளைஞர்களின் சாகசக் கதையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் கதை, தற்போதைய காலத்தில், படித்த இளைஞர்களுக்குப் பரிச்சயமான மென்பொருள்துறை கார்ப்பரெட் சுழலில் பரபரவென்று தொடங்கி, வரலாற்றுச் சின்னங்களாக விளங்கும் மகாபலிபுரம், தஞ்சை, கோவை என்று பல்வேறு ஊர்களுக்கு இழுத்துச் செல்கிறது.
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் மூலம் மறுபிரவேசம் எடுத்த நந்தா, சிறு இடைவெளிக்குப் பின் மீண்டும் கதாநாயகனாக நடிப்பதால், இந்தத் திரைப்படம் அவருக்குத் திருப்பு முனையாக அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
படத்தின் இடையிடையே தற்போதைய இளைஞர்களுக்கு தெரியாத பல ருசிகரமான, ஆச்சரியமான வரலாற்று விவரங்களையும் காட்சிகளாக்கிக் கதையுடன் கூறி ஆச்சர்ப்படுத்தியுள்ளார் இயக்குநர். அடுத்தது என்ன நடக்கப் போகிறது? என்று ஒவ்வொரு நிமிடமும் ரசிகர்களை கொக்கி போட்டு விறுவிறுவென இழுத்துச் செல்லும் விதத்தில் இப்படம் உருவாகியுள்ளதாம்.
சமீபத்தில் இப்படத்தின் பாடல்களை இயக்குநர் கெளதம் மேனன் வெளியிட்ட நிலையில், படத்தின் டிரைலர் கிறிஸ்துமஸ் பண்டிகையன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...