Latest News :

எழுத்தாளர் இமயத்திற்கு ’இயல் விருது’! - உற்சாகத்தில் ‘முந்திரிக்காடு’ குழு
Wednesday December-26 2018

கனடாவில் இயங்கி வரும் ‘தமிழ் இலக்கியத் தோட்ட அறக்கட்டளை’ சார்பாக ஒவ்வொரு ஆண்டும் தமிழ் இலக்கியத்தில் சிறப்பாக இயங்கி வரும் எழுத்தாளர்களை கெளரவிவ்க்கும் வகையில், ‘இயல் விருது’ வழங்கப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில், 2018 ஆம் ஆண்டுகான வாழ்நாள் சாதனையாளர் இயல் விருது, 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயக்க் இவரும் எழுத்தாளர் இமயத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சாதி ஆணவக்கொலையைப் பற்றி பெத்தவன் என்கிற நெடுங்கதை, இவரின் படைப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

 

பெத்தவன் நெடுங்கதை தான், இயக்குநர் மு.களஞ்சியம் தயாரித்து இயக்கத்தில், புதுமுகங்களோடு இயக்குநர் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ‘முந்திரிக்காடு’ என்ற தலைப்பில் திரைப்படமாக உருவாகியுள்ளது.

 

Munthirikkadu

 

ஆகவே, எழுத்தாளர் இமயத்திற்கு 2018 ஆம் ஆண்டுக்கான ‘இயல் விருது’ அறிவிக்கப்பட்டதில் ‘முந்திரிக்காடு’ படக்குழு உற்சாகமடைந்துள்ளது.

Related News

3947

ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான ‘காந்தி டாக்ஸ்’!
Saturday March-07 2026

இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர்  இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...

’தடயம்’ இணையத் தொடரின் சாதனை வெற்றி! - கொண்டாடி தீர்த்த ஜீ5
Saturday March-07 2026

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5  பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...

கணிக்க முடியாத காலநிலை! - பிரியங்கா மோகனின் கொரியா அனுபவம்
Saturday March-07 2026

கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...

Recent Gallery