கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘பேட்ட’ படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியுள்ள நிலையில், அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பதும் உறுதியாகிவிட்டது.
‘பேட்ட’ படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருப்பதோடு, அந்த படத்திற்கு பிறகு மேலும் ஒரு படத்தில் நடிக்கவும் ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளாராம். தற்போது அந்த படத்தை இயக்கும் இயக்குநரையும் ரஜினிகாந்த் தேர்வு செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
கார்த்தி நடிப்பில் வெற்றி பெற்ற ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கியவரும், அஜித்தின் 59 வது படத்தை இயக்குபவருமான வினோத் தான் ரஜினிகாந்தின் புதிய படத்தையும் இயக்கப் போவதாக கூறப்படுகிறது.
இளம் இயக்குநர்களிடம் கதை கேட்க தொடங்கியிருக்கும் ரஜினிகாந்த், சமீபத்தில் இயக்குநர் வினோத்திடம் கதை ஒன்றை கேட்டதோடு, கதை தனக்கு பிடித்திருப்பதாகவும், கதையை இன்னும் விரிவாக எழுதும்படியும் கூறியுள்ளாராம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து முடித்த பிறகு வினோத் படத்தில் தான் ரஜினிகாந்த் நடிக்கப் போகிறாராம்.
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...