நடிகராக தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் தனுஷ், தயாரிப்பாளராகவும் சில வெற்றிகளை கொடுத்து வருகிறார். தமிழ் மட்டும் இன்றி, இந்தி திரைப்படங்களிலும் நடித்து வருபவர், தற்போது ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.
நடிப்பது, தயாரிப்பது என்றில்லாமல் படங்களை இயக்கவும் செய்யும் தனுஷ், தான் இயக்கிய முதல் படத்தை மிகப்பெரிய வெற்றிப் படமாக கொடுத்தார். அதை தொடர்ந்து இரண்டாவதாக தான் இயக்கும் படத்தை பிரம்மாண்டமாக இயக்க முடிவு செய்தவர், அதை பீரியட் படமாக எடுக்க நினைத்தார். அப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கிய நிலையில், ரசிகர்களிடமும், சினிமாக்காரர்களிடமும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தனுஷ் இயக்கும் படத்தை தயாரிக்கும் ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம், தற்போது நிதி நெருக்கடியில் இருப்பதால், படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், படத்தை முழுவதுமாக டிராப் செய்யவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே சமயம், வேறு தயாரிப்பாளர் தயாரிக்க முன்வந்தால், தனது பிரம்மாண்ட படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க தனுஷ் தயாராகவே இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...